கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதோடு, சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் சீரியல் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும், சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சீரியல் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இதற்கிடையே பழையபடி சீரியல் படப்பிடிப்புகளை நடத்த முடியாமல் போனதாலும், அப்படி நடத்தினாலும், பழைய நடிகர்கள் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாலும், பிரபல தொலைக்காட்சி நான்கு சீரியர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால், அந்த சீரியலில் நடித்த வந்த நடிகர், நடிகைகள் பெரும் கவலையடைந்திருக்கிறார்கள்.
மறுபக்கம் திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும், என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், திரையரங்கங்களை திறக்கவும் அனுமதி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டாலும், இதில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், திரையரங்க தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சினிமா துறையின் எதிர்காலும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், சில பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தியேட்டர்களின் அனுமதி அளிக்க கூடாது, ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் உட்கார வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளோடு தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்க இருக்கிறதாம்.
மேலும், திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கவும் அனுமதி வழங்க முடிவு செய்துள்ள அரசு, வரும் ஆகஸ்ட் மாதம் இவ்விருண்டு துறைகளும் செயல்படுவதற்கு அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...