பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண விவகாரம் தான் தற்போது பெரும் பரபரப்பு செய்தியாக உள்ளது. வனிதாவின் திருமணத்திற்கு பலர் வரவேற்பு தெரிவிப்பது போல, சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சூர்யா தேவி என்ற பெண், யுடியுப் சேனலில் வனிதா குறித்து தரக்குறைவாக பேசுவதோடு, “வெட்டுவேன்.., உதைப்பேன்...” என்று பேசுவதோடு, அவரை “நாய், பன்னி” என்று குறிப்பிட்டும் பேசி வருகிறார். இந்த சூர்யா தேவி தினமும் வனிதா குறித்து போடும் வீடியோக்களை பல ஆயிரம் மக்கள் பார்ப்பதால், அவர் வீடியோ போடுவதை தொடர்ந்துக் கொண்டிருப்பதோடு, அதில் வனிதா பற்றி கடுமையாகவும், ஆபாசமாகவும் பேசி வருகிறார்.

இந்த நிலையில், சூர்யா தேவி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் வனிதா, சூர்யா தேவியின் பின்னணி குறித்த சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். அதில், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுடன் சூர்யா தேவி நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று உள்ளது.
மேலும், ஆண் ஒருவரிடம் தொலைபேசியில் சூர்யா தேவி கஞ்சா வியாபாரம் குறித்து பேசும் ஆடியோ ஒன்றையும் வனிதாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரங்களை போலீஸ் புகாருடன் இணைத்திருப்பதோடு, சைபர் கிரைமிலும் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
அதே சமயம், வனிதா குறித்து விமர்சனம் செய்து வரும் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கும் வனிதா, ரவீந்தரனை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார்.
சூர்யா தேவியின் பகீர் பின்னணியின் ஆதாரம் இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...