’புரியாத புதிர்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி மூன்றாவதாக இயக்கும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். அவருடன் தர்ஷனா பாணிக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கொரோனா பாதிப்புக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், கொரோனாவின் தீவிரத்தினால் பின்னணி வேலைகள் தடைபட்டது. இதையடுத்து அரசு சினிமா பின்னணி வேலைகளுக்கு அதுமதி அளித்ததை தொடர்ந்து, அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளின்படி சமீபத்தில் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, பிந்து மாதவி இன்று தனது டப்பிங் பணிகளை தொடங்கினார்.

தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.
ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் கதை.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...