”எதை எதையோ வாங்கி கொடுத்தேன்” - காஜல் மீது புகார் கூறிய இயக்குநர் மோகன்
Wednesday July-15 2020

‘திரெளபதி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்ட இயக்குநர் மோகனுக்கும், பிக் பாஸ் புகழ் காஜலுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் கோலிவுட்டின் சமீபத்திய பரபரப்பாகியுள்ளது. வனிதாவின் திருமணத்தை சுற்றி வந்த சோசியல் மீடியா சர்ச்சை தற்போது, மோகன் - காஜல் ஆகியோர் பக்கம் திரும்பியுள்ளது.

 

இதற்கு காராணம், மோகனின் முதல் திரைப்படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தில் நடித்த காஜலுக்கு, படப்பிடிப்பின் போது மோகன், பல பொருட்களை வாங்கி கொடுத்ததாக தெரிவித்திருப்பதோடு, அது குறித்து லிஸ்ட் வேண்டுமா? என்று கேட்டது தான் காரணம்.

 

அப்படி மோகன் கேட்டதற்கு அர்த்தம், அவர் காஜலுக்கு மது வாங்கிக் கொடுத்தார், என்று சூசகமாக கூறுவதாக நெட்டிசன்கள் கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், ஆம், நான் குடிப்பேன், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எனக்கு எப்போது மோகன் சரக்கு வாங்கிக் கொடுத்தார், என்று காஜல் பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு காரணம், இயக்குநர் மோகன், சமீபத்தில், கொரோனா வைரஸை ராமன் அழிக்க போவது போன்ற ஒரு பதிவை மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் தெரிவித்த நடிகை காஜல், ”என்ன சொல்ல வரார் இந்த சூத்திரன் என்று அவாளால் அழைக்கப்படும் இவர்” என்று கிண்டலடித்தார்.

 

காஜலின் இந்த கிண்டலால் கடுப்பான மோகன், ”என்னங்க மேடம்.. வேலை வெட்டி இல்லாம போச்சா.. விளம்பரம் தேவைபடுதா.. இப்படி குறுக்கு வழியில வராம திறமைய நம்பி உழைங்க.. வழியில நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.. நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள்.”என்று பதில் அளித்தார்.

 

இதற்கு பதில் அளித்த காஜல், ”யாருங்க குறுக்குவழி பத்தி பேசுறது, குறுக்கு வழியில் போய் இருந்தா இப்படி வெட்டியா இருக்க மாட்டேன் சார். எப்பவோ தமிழ் டிவின்னு ஒன்னு ஆரம்பிச்சு இருப்பேன். உங்க பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு ஃப்ரீயா தான் நடித்துக் கொடுத்தேன் யார் காள்லையும் நான் விழல” என்று பதில் அளித்தார்.

 

அதற்கு மோகன், இவவசமாகவா.. சுயநினைவு இருக்கா மேடம்.. என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தேன், தினம் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன்னு லிஸ்ட் சொல்லனுமா.. அன்று காட்டிய கொடுத்தேன்னு கண்ணியம் இன்றும் உண்டு என்னிடம்.. அதனால் சொல்லி காட்ட விரும்பல.. கவனமாக இருங்க உங்க ரசிகர்களிடம் என்று பதில் அளித்தார்.

 

இப்படி இருவருக்குமான கருத்து மோதல் தற்போது வளர்ந்துக் கொண்டிருக்க, இதற்கு ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருவதால், வனிதா - சூர்யா தேவி போல சோசியல் மீடியாவில் இன்னொரு மோதல் உருவாகி வருகிறது.

Related News

6791

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery