விஜய் படத்தை கைவிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்!
Thursday July-16 2020

விஜயின் ‘மாஸ்டர்’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதே சமயம், மாஸ்டர் நேரடியாக ஒடிடி-யில் ரிலீஸ் ஆகப்போவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாக, அதை தயாரிப்பு தரப்பும் மறுத்து வருகிறது. இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி திரையரங்கங்கள் திறக்கப்பட்டால் முதல் படமாக ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

 

இதற்கிடையே விஜயின் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் கடந்த சில மாதன்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸு கேட்ட சம்பள தொகையில் பாதியை மட்டுமே தர முடியும், என்று சன் பிக்சர்ஸ் கராராக கூறி விட்டது. அதற்கு முருகதாஸும் ஓகே சொன்ன பிறகு தான் படத்தின் அறிவிப்பே வெளியிடப்பட்டதாம்.

 

அதே போல், விஜயின் சம்பளம் குறித்தும் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாம். தற்போதைய சூழலில் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால், இழப்பு தான் ஏற்படும் என்று கூறிய சன் பிக்சர்ஸ் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு விஜயிடம் கூறியுள்ளது. ஆனால், விஜய் சம்பளத்தை குறைக்க முடியாது, என்று கூறி விட்டதால் சன் பிக்சர்ஸ் விஜய் படத்தை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், விஜய்க்கு பதிலாக சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கும் சன் பிக்சர்ஸ், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறதாம். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறாராம்.

Related News

6793

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery