யுடியுபில் சமீபத்திய பரபரப்பாக உருவெடுத்திருப்பவர் சூர்யா தேவி. திருமணமான பெண்ணான இவர், நடிகை வனிதா குறித்து தினமும் சுமார் மூன்று வீடியோக்களை வெளியிடுகிறார். அதில், மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி வனிதாவை விமர்சித்து வருகிறார்.
வனிதா மூன்றாவது திருமணம் செய்ததும், அவர் திருமணம் செய்த பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும், தான் பேசுவதாக சொல்லிக் கொண்டு சூர்யா தேவி வெளியிடும் வீடியோக்கள் எல்லை மீறியதாக இருக்கிறது. இதனால், அவரது வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் பார்க்க தொடங்கியதால், சூர்யா தேவி, எதை எதையோ பேசி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கும் சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாகவும், விளம்பரத்திற்காகவே இருவரும் இணைந்து இதை செய்வதாகவும், வனிதா தரப்பு குற்றம் சாட்டியதோடு, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டதோடு, சூர்யா தேவி கஞ்சா வியாபாரம் செய்பவர் என்பதற்கான தொலைபேசி ஆடியோவையும் வெளியிட்டனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி, அதில் மீண்டும் வனிதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, பகிரங்கமாக விரட்டல் விடுத்தால்.
இந்த நிலையில், சூர்யா தேவி இப்படி செய்வதற்கு காரணம், அவர் மக்களிடம் பிரபலமடைவதோடு, சினிமா மற்றும் டிவி வாய்ப்புகளை பெறுவதற்காக தான் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நாஞ்சில் விஜயுடன் இணைந்து லோக்கல் சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்திய சூர்யா தேவிக்கு, டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும், திரைப்படங்களில் நடிப்பதும் ஆர்வமாக இருந்துள்ளது. அதற்காகவே நாஞ்சில் விஜயுடன் பழகியவர், பிறகு வேறு சில டிவி பிரபலங்களுடன் பழகி இருக்கிறார்.
ஆனால், அவரது கனவு பலிக்காததால், தற்போது யுடியுப் பக்கம் திரும்பியவர், தூத்துக்குடி விவகாரம் குறித்து பேசியதோடு, தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து வீடியோ போட்டுள்ளார். அந்த வீடியோவால் போலீஸ் அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த சூர்யா தேவி, தற்போது வனிதாவை வைத்து போடும் வீடியோக்கள் வரவேற்பு பெறுவதால் அதை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது சூர்யா தேவி, டிவி மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமானதோடு, சோசியல் மீடியாவை பயன்படுத்துபவர்களிடமும் பிரபலமாகிவிட்டதால், அவருக்கு சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், சூர்யா தேவி வனிதா குறித்து இப்படி தாறுமாறாக பேசுவது, தன்னை விளம்பரப்படுத்தி அதன் மூலம் சினிமா மற்றும் டிவி வாய்ப்புகளை பெறுவதற்காக தான் என்று கூறப்படுகிறது. மேலும், சூர்யா தேவியுடன் தனக்கு நட்பு இருந்தது உண்மை தான், ஆனால் அவரது நடவடிக்கை சரியில்லாததால் அந்த நட்பை நான் துண்டித்துவிட்டேன், என்று நாஞ்சில் விஜயன் கூறியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...