வனிதாவை வறுத்தெடுக்கும் சூர்யா தேவி என்ற பெண் கடந்த சில நாட்களாகவே யுடியுப் வீடியோ வலைதளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போல தினமும் பல வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதிலும், வனிதா குறித்து அவர் பேசும் ஆபாசமான பேச்சுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் வீடியோ போடுவதை தொடர்ந்து செய்து வந்தார்.
இதற்கிடையே, வனிதா சூர்யா தேவி மீது போலிசில் புகார் அளித்து அவர் தொடர்பான சில திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்ட போதிலும், சூர்யா தேவி, வனிதா குறித்து தொடர்ந்து ஆபாசமமாக பேசியதோடு, அவரை மிரட்டும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், கடந்த சில தினங்களாகவே யுடியுபில் சூர்யா தேவியின் வீடியோக்கள் ஹாட் டாப்பிக்காக இருந்தது.
இந்த நிலையில், ‘ஊர் வம்பு’ மூலம் பிரபலமான நடிகை லட்சுமி, கருப்பர் கூட்டம் யுடியுப் சேனலுக்கும், முருக கடவுளுக்கு எதிராக வெளியான வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்., ”ஒழிக்கப்பட வேண்டிய சமூக புற்று நோயான கருப்பர் கூட்டம் போன்றவர்களை வேரோடு அறுக்கனும்” என்று லட்சுமி அதிரடியாக பேசியிருக்கிறார்.
நடிகை லட்சுமியின் இந்த அதிரடியான வீடியோ தற்போது பெரும் வரவேற்பு பெற்று வைரலானதை தொடர்ந்து, சூர்யா தேவியின் வனிதா விமர்சனம் வீடியோ தற்போது காணாமல் போய் விட்டது.
இதோ ஊர் வம்பு லட்சுமியின் வீடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...