தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த ஆண்ட்ரியா, ‘தரமணி’ என்ற வெற்றி படத்தின் மூலம் நல்ல நடிகை என்று பாராட்டப்பட்டாலும், அப்படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடுப்பாகி பல கருத்துக்களை பகிர்ந்து வந்தவர், திடீரென்று காணாமால் போய்விட்டார்.
இதற்கிடையே அரசியல் வாரிசு நடிகர் ஒருவருடன் தான் நெருங்கி பழகியதால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்றும் அதனால் சில மாதங்கள் சிகிச்சை பெற்றேன், என்றும் கூறிய ஆண்ட்ரியா, அந்த நபர் யார்? என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறினார். ஆண்ட்ரியா கூறிய நபர் யார்? என்று பல யூகங்கள் வெளியான நிலையில், அந்த நபர் பற்றி ஆண்ட்ரியா எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார்.
அதே சமயம், ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், ஆண்ட்ரியா அரசியல் வாரிசு பற்றி வெளியிட்ட சர்ச்சை தகவல்களே காரணம், என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் குறும்படங்களில் நடிக்க ஆண்ட்ரியா முடிவு செய்துள்ளாராம். அதன்படி, முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கும் குறும்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த குறும்படத்துடன் மேலும் சில இணைய தொடர்களிலும் நடிக்க ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தமாகியிர்ப்பதால் அவரை இனி ஒடிடி தளத்தில் தாராளமாக பார்க்கலாம், என்று கூறப்படுகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...