வனிதாவிடம் மன்னிப்பு! - பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தேவி
Friday July-17 2020

3 வது திருமணம் செய்துக் கொண்ட பிக் பாஸ் வனிதாவை யுடியுப் வீடியோ மூலம் விமர்சித்து வந்த சூர்யா தேவி, என்ற பெண் தனது வீடியோவில் வனிதாவை மிரட்டும் வகையிலும், ஆபசமாக பேசியும் வந்தார். சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த வீடியோக்கள் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால், அந்த பெண்ணும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

 

இதற்கிடையே, வனிதா விமர்சித்து வீடியோ வெளியிட்டு வரும் சூர்யா தேவி, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய வனிதா, சூர்யா தேவியின் பகீர் பின்னணி குறித்த ஆதாரங்களை வெளியிட்டதோடு, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சூர்யா தேவி கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், அவருக்கு விஜய் டிவி நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட டிவி பிரபலங்களுடன் நெருக்கம் இருப்பதாகவும், அவர்களுடன் சேர்ந்தே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினார். அதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார்.

 

வனிதாவின் போலீஸ் புகாருக்கு பிறகும், அவரை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி, அதில் “போலீசுக்கு என்னை பற்றி தெரியும், உன்ன கிழிச்சிடுவேன்” என்று தெரிவித்திருந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே, கடந்த இரு தினங்களாக வீடியோ வெளியிடுவதை நிறுத்திய சூர்யா தேவி, இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன், என்று தெரிவித்திருந்தார்.

 

மேலும், வனிதா அளித்த புகாரின் பேரில் சூர்யா தேவியை அழைத்து விசாரித்த போலீஸ், அவரை மன்னிப்பு கேட்கும்படி கேட்டுக்கொண்டதாம். ஆனால், தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், வனிதாவும் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று போலீசிடம் கூறியதாக தெரிவித்த சூர்யா தேவி, இனி வனிதா குறித்து வீடியோ போடுவதை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் போது வீடியோ வெளியிடுவேன், அதுவரை வனிதா குறித்து வீடியோ போடப்போவதில்லை, என்று சூர்யா தேவி தெரிவித்துள்ளார். 

 

ஆக, சூர்யா தேவி வனிதா குறித்து பேசும் கடைசி வீடியோ இது தான் போலிருக்கு, இதோ அந்த வீடியோ,

 

Related News

6797

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery