இயக்குநர் பாரதிராஜா இன்று 77 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இயக்குநரும் தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், பாரதிராஜாவுக்கு தனது கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து கவிதை இதோ,
அரங்கத்து
அகல் விளக்காக
இருந்த
தமிழ் சினிமாவை...
கிராமாயணம்
படிக்க வைத்து
நிலவில்
இறக்கி வைத்தவர்..
நீங்களும்
இளையராஜாவும்
அன்பு யென்று
எனை
அழைக்கும் போது,
சுனை நீராய்
நிரம்புகிறேன்..
புரட்சித் தலைவர்
நூற்றாண்டு விழா குழுவில்...
உங்களோடும்
பாக்கியராஜ்யோடும்
பணி புரிந்தது
குருகுல
நறுமண மகிழ்ச்சி...
காற்றாய்
புகழ் நிலைத்திருக்கட்டும்!
கடலாய்
கற்பனைகள்
பொங்கி வழியட்டும்...
தாகம்
கொண்டநதியே
சலங்கை கட்டும்
விலை வைக்கப்பட்ட
உங்கள் கார்களோடு...
விலை மதிப்பில்லா
ஆஸ்காரும் இணைந்து
தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும்...
ராஜாக்களால்
கலை
புதுசா பூத்த
ரோசாவாக மணக்கிறது
கூழாங்கற்களையும்
சிலையாக்கும்
உங்கள் -
விழி உளி்...
உங்களை
சந்தித்த
சாதராண மனிதனும்..
உறை வாள்
உயர் தர
கலைஞானாகி விடுவான்...
புகழுக்குரியவரை
கடந்து செல்கையில்
தலைகளும்
தன்னிச்சையாக
வணங்கும்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...