அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’
Tuesday July-18 2017

நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி ராஸ்கல்.இந்தப் படம் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை இயக்கிய சித்திக் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் இயக்குகிறார். 

 

இவர் தமிழில் ஏற்கனவே விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ், விஜயகாந்த், பிரபுதேவா நடித்த எங்கள் அண்ணா மற்றும் விஜய், அசின் நடித்த காவலன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர்.பாஸ்கர் ஒரு ராஸ்கல்- இயக்குநர் சித்திக் தமிழில் இயக்கும் நான்காவது படம். இந்தப் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஹர்சினி தயாரிக்கிறார்.

 

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.மற்றும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். பா.விஜய், விவேகா பாடல்கள் எழுத, அம்ரேஷ் இசையமைக்கிறார்.

 

ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன், எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர், புரொடக்ஷன் டிசைனர் :  மணி சுசித்ரா, ஆர்ட் : ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி:  பெப்சி விஜயன், நடனம் : பிருந்தா, Executive Producer  : விமல்.ஜி, தயாரிப்பு : எம்.ஹர்சினி, இயக்கம்  : சித்திக்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தை செப்டம்பர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Related News

68

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery