அஜித் - விஜய் ரசிகர்களை வைத்து நீயா? நானா? என்ற போட்டி நடத்தினால், தற்போது நம்பர் ஒன் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓரம் கட்டிவிடலாம் போலிருக்கு. அந்த அளவுக்கு தங்களது நடிகர்களின் படங்களை கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த மாதம் வெளியான அஜித்தின் விவேகம் வியாபார ரீதியில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாலும், அதன் டிரைலர் யுடியுபில் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்தது.
இந்த சாதனையை மெர்சல் முறியடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், சொன்னது போலவே செய்தும் காட்டி விட்டார்கள்.
நேற்று மாலை 6 மணிக்கு வெளியான ‘மெர்சல்’ டீசர் சில நிமிடங்களிலேயே 8,589,250 பார்வைகளையாளர்களை கடந்ததுடன், 6 லட்சத்து 72 ஆயிரம் லைக்குகளை பெற்று, அஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. விவேகம் டீசர் வெளியாகி பல மாதங்களுக்கு பிறகே 5 லட்சத்து 99 ஆயிரம் லைக்குகளை பெற்று சாதனை புரிந்த நிலையில், மெர்சல் ஒரே நாளில், 6 லட்சத்து 72 ஆயிரம் லைக்குகளை பெற்று சரித்திர சாதனை பெற்றுள்ளது.
விஜய் ரசிகர்கள் சொன்னது போலவே ‘மெர்சல்’ டீசரை சாதனை டீசராக்கியுள்ள நிலையில், படத்தையும் இதே அளவுக்கு கொண்டாடுவார்கள், என்ற நம்பிக்கையில் இப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் குஷியடைந்துள்ளதாம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...