‘சித்தி 2’ சீரியலுக்கு வந்த பிரச்சினை! - ராதிகாவின் அதிரடி நடவடிக்கை
Saturday July-18 2020

கொரோனா பாதிப்பால் சினிமா மற்றும் டிவி சீரியல் துறைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது சினிமா திரையரங்கங்கள் திறக்கப்படும் என்றும், சினிமா படப்பிடிப்புகள் துவங்கும் என்றும் தெரியவில்லை. இதனால், அத்துறையில் ஈடுபட்ட தொழிலாளிகள் மட்டும் இன்றி முதலாளிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

 

இதற்கிடையே, சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்தாலும், சீரியலில் நடிக்கும் பழைய நடிகர், நடிகைகள் மீண்டும் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சில தொலைக்காட்சிகள் தங்களது பழைய சீரியல்களை நிறுத்தியுள்ளது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நான்கு சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கொரோனா பிரச்சினைக்கு முன்பு துவங்கிய ராதிகாவின் ‘சித்தி 2’ சீரியலும் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த சீரியலில் நடிக்கும் சில நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு வர மறுத்து வருகிறார்கள். காரணம், கொரோனா வைரஸ் பரவல் சென்னையில் தீவிரமடைந்திருப்பதால் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று கூறி வருகிறார்கள். மறுபக்கம் தொலைக்காட்சியும் சீரியலின் புதிய எப்பிசோட்களை உடனே ஒளிபரப்ப வேண்டும், இல்லை என்றால் அந்த சீரியலை நிறுத்தி விட்டு புதிய சீரியலை ஒளிபரப்பு செய்ய வேண்டும், என்று அழுத்தம் கொடுத்து வருகிறது.

 

மேலும், தற்போது மக்களிடம் சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைத்துவிட்டதால், பல தொலைக்காட்சிகள் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்கிறது. இதனால் சேனலுக்கு நல்ல டி.ஆர்.பி கிடைப்பதால் தொடர்ந்து திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்வதில் சேனல்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் பல சீரியல் தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.

 

அந்த வகையில், ராதிகா தற்போது நம்பியிருக்கும் தனது ‘சித்தி 2’ சீரியலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது விடா முயற்சியினால், எப்படியும் ‘சித்தி 2’ சீரியலை வெற்றி சீரியலாக மாற்றிக் காட்டும் வகையில், பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

 

Nizhalgal Ravi and Meera Krishnan

 

அதன்படி, ‘சித்தி 2’-வில் ராதிகாவுக்கு கணவராக நடித்து வந்த பொன்வன்னனுக்கு பதில் இனி நிகழ்கள் ரவி அந்த வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல், புதிய வில்லி கதாப்பாத்திரத்தில் ‘நாயகி’ புகழ் மீரா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இப்படி பல்வேறு மாற்றங்கள் மூலம் ‘சித்தி 2’ சீரியலின் புதிய எப்பிசோட்களை படமாக்க தொடங்கியிருக்கும் ராதிகா, விரைவில் தனது சீரியல் பழையபடி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் விறுவிறுப்பாக பணியாற்ற தொடங்கியுள்ளார்.

Related News

6802

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery