பிக் பாஸ் வனிதா பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் அல்ல, அன்பின் பரிமாற்றம், என்று வனிதா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, மூன்றாவது திருமணம் செய்துக் கொண்ட வனிதாவை பலர் விமர்சித்து வருகிறார்கள். ஊர் பெயர் தெரியாதவர்கள் கூட வனிதாவை விமர்சித்து அதன் மூலம் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார். அப்படி ஒருவராக யுடியுபில் சூர்யா தேவி என்ற பெண் பிரபலமாக, அவரின் ஆபாச பேச்சாலும், மிரட்டல் பேச்சாலும் நொந்துப் போன வனிதா அவர் மீது போலீசில் புகார் அளித்தார். கூடவே அந்த பெண் ஒரு கஞ்சா வியாபாரி என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.
மேலும், பீட்டர் பாலின் முதல் மனைவியும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். அதன்படி, அவர் பீட்டர் பாலை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில், இது குறித்து பீட்டர் பால் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.
இந்த நிலையில், வனிதா மற்றும் பீட்டர் பால் இணைந்து ஊடகன் ஒன்றில் முதல் முறையாக பேசியுள்ளார்கள். வனிதா பீட்டர் பாலை பேட்டி எடுப்பது போல உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், ”நான் முதல் முறையாக, சினிமாவில் கதாநாயகியாவதற்கு முன்பாக, சிம்புவை தான் பேட்டி எடுத்தேன், அவனை தான் முதன் முதலில் பேட்டி எடுத்தேன். தற்போது அவன் சர்ச்சை நடிகராகி விட்டான். அவனுக்குப் பிறகு உங்களை பேட்டி எடுக்கிறேன், அதனால் நீங்களும் பெரிய இயக்குநர் ஆகிவிடுவீர்கள்” என்று வனிதா கூறியுள்ளார்.
வனிதாவின் இந்த பேச்சை கேட்ட பீட்டர் பால், சற்று அதிர்ச்சியடைந்தாலும், சர்ச்சை இயக்குநராகாமல் நல்ல இயக்குநராக வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...