கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் தடைபட்டதால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் ஒளிபரப்பும் தடைபட்டது. இதனால், பழைய எப்பிசோட்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பி வந்ததால், மக்களிடம் சீரியலுக்கு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. தற்போது சில டிவி சேனல்கள் தங்களது சீரியல்களின் படப்பிடிப்பை தொடங்கியிருந்தாலும், சில தொலைக்காட்சிகள் பழைய சீரியல்களை நிறுத்திவிட்டது.
இதற்கிடையே, மக்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் எப்போது தொடங்கும், என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கோரோனா கட்டுப்பாட்டுகளும் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 100 நாட்கள் போட்டியை குறைவான நாட்களாக மாற்றி நிகழ்ச்சியை நடத்தலாம் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களிடம் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை நிறுத்துவது சரியில்லை, என்ற முடிவுக்கு வந்திருக்கும் தயாரிப்பு குழு நிகழ்ச்சியை இந்த ஆண்டு எப்படியாவது நடத்த வேண்டும், என்று முயற்சித்து வருகிறது. அதன்படி, தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கான வேலைகளில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டு வருவதாகவும், நான்காவது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழியை போல தெலுங்கிலும் நான்காவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான வேலையில் தயாரிப்பு குழு ஈடுபட்டுள்ளது. அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் ஒப்பந்தம் போடும் பணிகளை ஆன்லைனில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நாகர்ஜூனா, கொரோனா பிரச்சினை முழுவதுமாக முடிந்தால் தான், சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் தான் பங்கேற்பேன் என்று கூறிவிட்டாராம். இதனால், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வருடம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது நான்காவது சீசனுக்கான பணிகளை தயாரிப்பு தரப்பு தொடங்கினாலும், நாகர்ஜுனாவின் முடிவால் அதிர்ச்சியடைந்திருப்பவர்கள், தேவைப்பட்டால் வேறு ஒரு பிரபலத்தை நடுவராக்கி நிகழ்ச்சியை நடத்தவும் ரெடியாக இருப்பதாக பிக் பாஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...