தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார். நடிப்பு, இயக்கம் மட்டும் இன்றி தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
மேலும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து தைரியமாக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவின் மூன்றாம் திருமண விவகாரத்திலும் நுழைந்தார். வனிதாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவை விமர்சித்து சில யுடியுப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனையும், வனிதாவையும் யுடியுப் சேனல் ஒன்று நேரலையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்தது. இந்த நேரலையில், ”தனது வாழ்க்கை விவகாரம் குறித்து பேச நீங்க யாரு?, உங்களுக்கு இதுப்பற்றி என்ன தெரியும்?” இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க என்று வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டார்.
பிறகு, கோபமடைந்த வனிதா, “நீ யாரென்று எனக்கு தெரியும், சொல்லவா?, நீ இருக்கும் இண்டஸ்ட்ரியல தான் நானும் இருக்கேன், நீ பத்தினியா?, நீ எத்தனை பேரை வெச்சிருக்கேனு சொல்லவா?” என்று வெளுத்து வாங்கியதோடு, போடி, என்று ஒருமையிலும் பேசியவர், தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து பல திடுக்கிடும் விஷயங்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...