அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வாலி’. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் முதல்படமான இப்படம் அஜித்தின் மார்க்கெட்டை உயர்த்தியதோடு, அவரது சினிமா வாழ்க்கையை சரிவில் இருந்தும் மீட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வரலாறு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையையும் அவர் பெற்றிருக்கிறாராம்.
இவ்விரு படங்களில் ஒன்றை அவர் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் ஹீரோவாக அஜித்தே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அஜித், தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தாலும் படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என்றும், கொரோனா பிரச்சினை முழுவதுமாக சரியான பிறகே படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேண்டும், என்று ‘வலிமை’ படக்குழுவுக்கு அஜித்து தெரிவித்து விட்டார்.
இதனால், அப்செட்டான போனி கபூருக்கும் அஜித்துக்கும் இது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், அஜித்தை சமாதானப்படுத்துவதற்காகவே அவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களின் ரீமேக் உரிமையை பெற்று இந்தியில் படம் தயாரிக்கும் முயற்சியில் போனி கபூர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எது உண்மை என்பது, கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகே தெரியும்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...