கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் சினிமா திரையரங்கங்கள் மூடப்பட்டதோடு, திரைப்படம் மற்றும் சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பல சீர்யல்களின் பழைய எப்பிசோட் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் மக்களுக்கு சீரியல் மீது இருந்த ஆர்வம் குறைந்தது.
இதற்கிடையே, மக்களை கவர்வதற்காக திரைப்படங்களை ஒளிபரப்ப தொடங்கிய பல தொலைக்காட்சிகள் அதன் மூலம் நல்ல டி.ஆர்.பி-யையும் பெற்று வந்தது.
இந்த நிலையில், ஊரடங்கு சமயத்தில் ஒளிபரப்பட்ட திரைப்படங்களில், அதிக பார்வையாளர்களை பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில், 117.9 மில்லியன் பார்வையாளர்களுடன் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார். 76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் லாரன்ஸ் 2 வது இடத்தையும், 65.8 மில்லியன் பார்வையாளர்களுட ரஜினி மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 4 வது இடத்தையும், பிரபாஸ் 5 வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த இந்திய சினிமாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்த புள்ளி விபரத்தின் மூலம், விஜயின் படங்களுக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டும் இன்றி, வட மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருவது உறுதியாகியுள்ளது.
இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் குஷியடைந்திருப்பதோடு, இதனை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கியும் வருகிறார்கள்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...