வனிதாவின் 3 வது திருமணத்திற்கு எதிராகவும், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கிறேன், என்று கூறிக்கொண்டு யுடியுபில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சூர்யா தேவி. இவர் வனிதாவை மிக கடுமையாக விமர்சித்து வெளியிடும் வீடியோக்களில் மிக ஆபாசமாக பேசுவதோடு, தனது உடல் செய்கைகளையும் ஆபாசமாக செய்கிறார். இதற்கு பல நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருவதால், சூர்யா தேவி வீடியோ வெளியிடுவதை தற்போது வரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, சூர்யா தேவி குறித்து வனிதா காவல் துறையில் புகார் அளித்ததோடு, அவர் பற்றிய பகீர் பின்னணி குறித்த ஆதாரங்களையும் வெளியிட்டார். அப்போதும் சூர்யா தேவி, வனிதாவை மிரட்டி வீடியோ வெளியிட்டார். சூர்யா தேவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் தலைவரான ராஜேஸ்வரி பிரியா, சூர்யா தேவிக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பணத்திற்காக இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுபடும் சூர்யா தேவி, இதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை, சட்ட ரீதியில் எடுக்கப்படும், என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, சூர்யா தேவி பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறியதோடு, அவரை கடுமையாக எச்சரித்தார்.
இதோ அந்த வீடியோ,
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...