தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதோடு பட வாய்ப்புகளை இழந்தார். இதையடுத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் இழந்த படங்களை திரும்ப பெற்றார். அந்த வகையில், ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிம்பு திருமணம் குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று, சிம்புவும், திரிஷாவும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் பிரபல சினிமா நாளிதழாக விளங்கும் பிலிம்பேர் இந்த செய்தியை வெளியிட்டிருப்பதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்ட திரிஷாவுக்கு அவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றது.
தான் கடைசிவரை நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்று கூறி வரும் திரிஷா, திருமணம் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறி வருகிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...