வனிதா திருமண விவகாரம் தொடர்பாக யுடியுபில் சூர்யா தேவி என்ற பெண் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியை முதல் முறையாக பேட்டி எடுத்த நிலையில், சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய வனிதா, அது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், நாஞ்சில் விஜயும், சூர்யா தேவியும் நெருக்கமாக டிக் டாக் செய்வது போல இருந்தது. மேலும், ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் ஆகியோருடன் சூர்யா தேவி இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.
இதற்கிடையே, சூர்யா தேவி குறித்து காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர், நாஞ்சில் விஜயன் பெண்களை வைத்து பிராத்தல் தொழில் செய்து வருகிறார், என்று கூறியதோடு, சூர்யா தேவி கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
வனிதா வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நாஞ்சில் விஜயன், தனக்கும் சூர்யா தேவிக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நட்பு இருந்தது. ஆனால், அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரது நட்பை துண்டித்து விட்டேன். தற்போது வனிதா விவகாரத்தால் அவரை பேட்டி எடுப்பதற்காக மட்டுமே சந்தித்தேன், என்று கூறினார்.
மேலும், வனிதா குறித்தும் தன்னிடம் பல ஆதாரங்கள் இருக்கிறது. அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு தெரியும். தேவை இல்லாமல் என்னைப் பற்றி தவறாக பேசினால் வனிதா குறித்து பல ஆதாரங்களை நான் வெளியிடுவேன். அவர் யாருடன் கூத்தடித்தார், யாருடன் சேர்ந்து சரடிக்கடித்தார், என்பதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது, என்று கூறியவர், இனி வனிதா குறித்து தான் பேசப்போவதில்லை, என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், வனிதா ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதோடு, அவருடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்றை நாஞ்சில் விஜயன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, “இது சும்மா டிரைலர் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், முழு படத்தை எப்போது வெளியிடப் போகிறீர்கள்? என்றும், அந்த நபர் யார்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...