ஸ்ருதி ஹாசனும் அதுல இறங்கப் போறாரா! - ரசிகர்கள் ஷாக்
Wednesday July-22 2020

தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹாசன், திடீரென்று திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியவர், இசைத் துறையில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார். லண்டனில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

 

அதன்படி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், அப்படியே இசைத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இத்துடன், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் தொடர்ந்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் புதிதாக யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகர், நடிகைகள் பலர் யூடியுப் சேனல் தொடங்கி வந்தாலும், அவர்கள் பட வாய்ப்புகள் இல்லாததால் அதில் இறங்குகிறார்கள், என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், ஸ்ருதி ஹாசன் பிஸியான நடிகையாக இருக்கும் போதே, யூடியுப் சேனல் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளது. இருந்தாலும், ஸ்ருதி ஹாசன் தொடங்கியுள்ள யூடியுப் சேனலில் பல அரிய கானொளிகள் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

 

ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார்.

 

ஸ்ருதி, பிரிட்டைன் முழுவதும் இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப் பயணம் செய்துள்ளார். தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் உருவாக்கிய படைப்புகளையும், உலகம் முழுவதும் அவர் மேடையேற்றிய இசை நிகழ்ச்சிகளிலிலிருந்து, பார்த்திராத காணொலிகளையும் வெளியிடவிருக்கிறார்.

 

இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், “சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்கும் ஒரு யூடியூப் சேனல் தான் அடுத்த சரியான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அசல் படைப்புகள் , எனது இசை நிகழ்ச்சிகளின் காணொலிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொலிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்.” என்கிறார்.

Related News

6814

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery