வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதியின் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அந்த வகையில், அருள்நிதி நடிப்பில் உருவாக உள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு ‘டைரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருள்நிதியின் பிறந்தநாளான ஜூலை 21 ஆம் தேதி (நேற்று) தலைப்பு அறிவிக்கப்பட்டது.
’டிமாண்டி காலணி’, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மர்மங்கள் நிறைந்த புலனாய்வு திரில்லர் ஜானர் படமான ‘டைரி’ குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறுகையில், “இயக்குநர் இன்னாசி பாண்டியன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, படத்தின் கதைக் கரு மற்றும் அதை அவர் விவரித்த விதத்தில் நான் பெரிதும் கவரப்பட்டேன். திகில் மற்றும் மர்மங்களுடன் ஆச்சரியங்கள் நிரம்பிய கதை இது. திரைத்தொழிலின் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அருள் நிதியின் படங்கள் லாபம் ஈட்டித் தருவதால், இப்போது அவரை தயாரிப்பாளர்களின் சொத்து என்று சொல்லலாம். படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மிகுந்த நம்பிக்கையூட்டுபவர்களாக இருப்பதால், தனிப்பட்ட முறையில் நான் 'டைரி' படத்தை திரையில் காண ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.

பவித்ரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஷாரா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரோன் எதன் யோஹான் இசையமைக்க, ஞானக்கரவேல் பாடல்கள் எழுதுகிறார். எஸ்.பி.ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்ய, பிரதீப் தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கிய உடன் ‘டைரி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...