கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும், சாலை ஓரம் வசிப்பவர்களுக்கும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்து வருகிறார்கள். சுமார் 100 நாட்களுக்கு மேலாக தொடரும் அவர்களது இந்த உதவி, வரும் ஜூலை 23 ஆம் தேதிக்காக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. ஆம், ஜூலை 23 ஆம் தேதி நடிகர் சூர்யாவுக்கு 45 வது பிறந்தநாள். இதனை கொண்டாடும் வகையில், சூர்யாவை போலவே அவரது ரசிகர்களும் பல்வேறு சமூக பணிகளையும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்படி ஜூலை 23 ஆம் தேதி, சென்னையில் 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதிலும் வழக்கமாக உணவு வழங்கப்படுகிறது. இப்படி சூரியாவின் 45 வது பிறந்த நாளை சேவை நாளாக கொண்டாடும் சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது, சூர்யாவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா பாதிப்பால் தள்ளி போனாலும், அவ்வபோது அப்படத்தின் அப்டேட் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடை செய்கிறது. அதன்படி, சூர்யாவின் பிறந்தநாளுக்கு ‘சூரரைப் போற்று’ படத்தின் 3 வது பாடலை, வெளியிட உள்ளதாக 2டி நிறுவனம் அறிவித்துள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...