வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து யுடியுபில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவி, வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாசமாக பேசியும் வீடியோக்கள் வெளியிட்டு வருவது தமிழகமே அறிந்த ஒன்று தான். வனிதா இவர் மீது போலீசில் புகார் அளித்தும், சூர்யா தேவியின் ஆபாச வீடியோக்கள் தொடர்ந்து வெளியானது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கிடையே, சூர்யா தேவி இப்படி பேசுவது, அனைத்து பெண்களுக்குமே எதிராக முடியும், அதனால் இந்த பிரச்சினை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்குவேன், என்று அனைத்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் ராஜேஸ்வரி பிரியா சமீபத்தில் கூறியிருந்தார்.
ராஜேஸ்வரி பிரியாவின் இந்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி, வனிதாவை ஆபாசமாக பேசுவதை தொடர்ந்துக் கொண்டிருந்தார். அவருக்கு தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், நேற்று மாலை சூர்யா தேவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வடபழனி காவல் நிலைய காவலர்கள் அவரை நேற்று மாலை 6 மணிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று, பிறகு அவரை கைது செய்து இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், இதனால், சூர்யா தேவியின் பிள்ளைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக, பெண் ஒருவர் யுடியுபில் வீடியோ வெளியிட்டார். ஆனால், சில மணி நேரங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்டு விட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இன்று தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி ஆகியோரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், சூர்யா தேவிக்கும், அவரது வீடியோ பதிவுக்கும் இன்று முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சூர்யா தேவி கைது வீடியோ,
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...