கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வந்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கிறது. மேலும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனையும் நடவடிக்கை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சர்ச்சை நடிகை என்று பெயர் எடுத்த தமிழ் நடிகையான கஸ்தூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதாவின் மூன்றாம் திருமணம் தொடர்பாக பல பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சூர்யா தேவி என்ற பெண் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரியும் வனிதாவுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
இது தொடர்பாக வனிதா காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறை, நேற்று மாலை சூர்யா தேவியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அதேபோல், ரவீந்திரன், நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்தது.
ஆனால், நடிகை கஸ்தூரி, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தாராம். லட்சுமி ராமகிருஷ்ணன், தான் கடந்த 5 மாதமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை, என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...