வனிதா விஜயகுமாரின் 3 வது திருமண விவகாரம், சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வனிதாவை ஆபாசமாக பேசி வந்த சூரியா தேவி, என்ற பெண் நேற்று முன் தினம் இரவு திடீரென்று கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பிறகு இந்த பிரச்சினை தீர்ந்துவிடும், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தான் வனிதாவை விட மாட்டேன், தொடர்ந்து வீடியோ போடுவேன், என்று சூரியா தேவி கூறி அதிர்ச்சியளித்துள்ளார். மேலும், தன்னை கஞ்சா வியாபாரி, பிரார்த்தல் தொழில் செய்பவர், என்று வனிதா கூறியிருக்கிறார். நான் அப்படிப்பட்டவள் இல்லை, என்று அவர் கூறி என் மீது அவர் சுமத்திய பழி போலி, என்று கூற வேண்டும். அப்படி அவர் கூறினால், இனி நான் வனிதா பற்றி வீடியோ போட மாட்டேன். ஆனால், அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை திரும்ப பெறவில்லை என்றால், நான் வனிதா பற்றி தொடர்ந்து வீடியோ போட்டுக் கொண்டுதான் இருப்பேன், என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது பா.ஜ.க சார்பில் நடிகை வனிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரால் வனிதா விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், தஞ்சாவூரில் இருக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள், அந்த ஊர் பெண்களும் அதை சாதாரணமாக தான் எடுத்துக் கொள்வார்கள், என்று வனிதா கூறியிருந்தார். வனிதாவின் இந்த கருத்துக்கு எதிராக தான் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி தஞ்சை மக்களை இழிவாக பேசிய நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...