விஜய் ஆண்டனி நடிப்பில், சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘பிச்சைக்காரன் 2’ என்ற தலைப்பில் தயாரித்து, விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் ஆண்டனி தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டார். விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், இந்நிறுவனங்களின் 10 வது தயாரிப்பாகும்.
இதுவரை விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அதிக பொருட்ச் செலவில் உருவாக உள்ள இப்படத்தை ‘பாரம்’ படம் மூலம் தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும், இப்படத்திற்காக சுமார் 15 கிலோ உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஜய் ஆண்டனி, அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...