போட்டோவை தொடர்ந்து வனிதாவின் வீடியோ லீக்! - பழி தீர்க்கும் நாஞ்சில் விஜயன்
Saturday July-25 2020

பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணமும், அதற்கான விமர்சனங்களும் சோசியல் மீடியாவின் தற்போதைய பேசுப்பொருளாகி உள்ளது. அதிலும், இந்த விவகாரத்தில், யாரென்றே தெரியாத ஒரு பெண் பேசி வரும் ஆபாச பேச்சுக்களுக்கு எதிராக வனிதா போலீசில் புகார் அளிக்க, போலீசாரும் அந்த பெண் மீது கைது நடவடிக்கை எடுத்த பிறகும் இந்த பிரச்சினை தீரவில்லை.

 

வனிதா விவகாரத்தை வைத்து சிலர் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருவதாக வனிதா தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதோடு, அந்த பட்டியலில் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தது. மேலும், நாஞ்சில் விஜயன் சட்டத்திற்கு எதிரான சில விஷயங்களில் ஈடுபட்டு வருவதாகவும் வனிதா தரப்பு குற்றம் சாட்டியது.

 

வனிதா தரப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நாஞ்சில் விஜயன், வனிதாவை எச்சரித்து வீடியோ வெளியிட்டதோடு, அவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்த வனிதா, அவர் என் குடும்ப நண்பர், என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், புகைப்படத்தை தொடர்ந்து வனிதாவின் வீடியோ ஒன்றை நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வனிதாவின் பேட்டியான அந்த வீடியோவில், வனிதா “தமிழக பா.ஜ.க-வில் என்ன 10 பேர் இருப்பார்களா” என்று கிண்டலாக பேசியுள்ளார்.

 

 

ஏற்கனவே, தஞ்சாவூர்காரர்கள் அனைவரும் இரண்டு மனைவிகள் வைத்திருப்பார்கள், என்று வனிதா பேசியதற்கு பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாஞ்சில் வெளியிட்ட வீடியோவை பா.ஜ.க-வை வனிதா விமர்சித்து பேசியிருப்பதால், அவர் மீது வேறு சில புகார்கள் கொடுக்கப்படுமோ, என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இதோ அந்த வீடியோ,

Related News

6828

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery