பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தனது வசீகர குரலால் பல மொலோடி பாடல்களை கொடுத்திருக்கும் வைக்கம் விஜயலட்சுமி முதல் முறையாக குத்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘கால் டாக்ஸி’ என்ற படத்தில் “கிக்கு செம்ம கிக்கு...” என்று தொடங்கும் இப்பாடலை
வைக்கம் விஜயலட்சுமி தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு வரிகள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர்.
கால் டாக்ஸி படத்தை கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வருகிறார். தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட்அஜய்யும் கவனித்துள்ளார்கள்.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகத காடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...