சிட்னியுடன் இணைந்த நடிகை சோனியா அகர்வால்! - குவியும் வாழ்த்து
Saturday July-25 2020

’காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘திருட்டுப்பயலே’, ’புதுப்பேட்டை’, ‘மதுர’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து பிஸியான நடிகையாக இருந்த போதே இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

 

2006 செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்ட சோனியா அகர்வால், 2010 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதோடு, அவரிடம் ரூ.2 கோடி இழப்பீடாக பெற்றுக் கொண்டார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய சோனியா அகர்வாலுக்கு விவேக்குக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், அவர் எதிர்ப்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தவருக்கு, அந்த வாய்ப்புகளும் குறைந்தது.

 

இருப்பினும், தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிகளிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், தற்போதைய ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே தனது நண்பர்களுடன் இணைந்து புதிய தொழிலில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியவர், திரிஷா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல சினிமா நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சிட்னி ஸ்லேடனுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

Tale of Two

 

’டேல் ஆப் டூ’ (Tale of two) என்ற பெயரில் சோனியா அகர்வாலும் அவரது நண்பர்களுடன் தொடங்கியுள்ள இந்த நிறுவனம், திருமண நிகழ்ச்சிகளை வழக்கமாக அல்லாமல் கிரியேட்டிவாக செய்துக் கொடுக்கும். இந்த நிறுவனத்தில் சோனியா அகர்வால் திருமண வடிவமைப்பு இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். சிட்னி ஸ்லேடன் ஸ்டைலிங் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இவர்களுடன் ஆனந்த் பால்கி என்பவர் நிறுவன இயக்குநராகவும், அவரது மனைவி பிரியதர்ஷினி விற்பனை இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

 

இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ள சோனியா அகர்வால், சிட்னி ஸ்லேடன், ஆனந்த் பால்கி மற்றும் பிரியதர்ஷினி ஆனந்த் ஆகியோரது இந்நிறுவனத்திற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

Related News

6832

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery