ஷெரீன் அம்மாவுக்கு 2 வது திருமணம்! - அவருக்கு எப்போ தெரியுமா?
Sunday July-26 2020

2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஷெரீன், தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை இதையடுத்து, மலையாளம் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து வந்தவர், இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நன்பேண்டா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டால் மீண்டும் மக்களிடம் பிரபலமாகியிருக்கும் ஷெரீன், தற்போது சில திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

 

விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் கோவைக்கு சென்ற ஷெரீன் ஊரடங்கு காரணமாக அங்கே சிக்கிக் கொண்டார். மார்ச் மாதம் முதல் தற்போது வரை கோவையிலேயே இருக்கும் ஷெரீன், விரைவில் பெங்களூர் திரும்ப இருக்கிறாராம்.

 

இந்த நிலையில், தனது அம்மாவுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது, என்று ஷெரீன் கூறியிருக்கிறார். அவர் குழந்தையாக இருக்கும் போதே, அவரது அப்பா, அவர்களை விட்டு சென்றுவிட்டார், என்று பிக் பாஸ் போட்டியில் ஷெரீன் கூறியிருந்த ஷெரீன், தனது அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் பற்றி தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறாராம்.

 

இதை பேட்டி ஒன்றில் கூறிய ஷெரீனிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்க, அதற்கு ஷெரீன் அதிர்ச்சியான தகவல் அளித்ததோடு, வனிதா விவகாரம் குறித்து மறைமுகமாக கிண்டல் செய்தார்.

 

அவர் என்ன கூறினார் என்பதை அறிய, அவரது இந்த பேட்டியை பாருங்கள்,

 

Related News

6834

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery