தனியார் நிறுவனத்தின் மோசடி! - நயன்தாராவுக்கு ஏற்பட பல கோடி இழப்பு
Tuesday July-28 2020

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவிலேயே அதிகம் சம்பள வாங்கும் நடிகையான நயன்தாரா, எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 

இப்படி திரைப்படங்களு மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நயன்தாரா, அந்த பணத்தை நிலத்தின் மீது முதலிடு செய்த நிலையில், தற்போது அதில் பல கோடிகள் அவருக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நிலங்களை விற்பனை செய்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்தி, அந்த நிலங்களை கோடி கணக்கான விலையில் அந்நிறுவனம் விற்று வருவதாக கூறப்படுகிறது. அதில் நயன்தாராவும் ஒருவராம்.

 

இந்த நிலையில், நயன்தாரா வாங்கியிருக்கும் நிலை, நீர்நிலை புறம்போக்கு நிலம் என்பது தெரிய வந்துள்ளதாம். ரியல் எஸ்டேட் நிறுவனம் நயன்தாராவை ஏமாற்றி அந்த நிலத்தை விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா மட்டும் இன்றி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சில நடிகைகளும் அந்த இடத்தில் நிலம் வாங்கியிருக்கிறார்களாம்.

 

ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த நிலம், சுமார் 3000 ஏக்கர் சாகுபடிக்குத் தேவையான மழைநீர் பிடித்து வைக்கும் ஆதாரம் என்று தெரிய வந்துள்ளது. அதனால், அந்த இடத்தில் நிலம் வாங்கிய நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

 

Related News

6843

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery