நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை தொடர்ந்து அவர் நடிக்கும் பீரியட் படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் 1964 ஆம் ஆண்டின் பீரியட் காதல் கதையாகும்.
’நடிகையர் திலகம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வைவைஜெயந்தி சினிமாஸ் ஸ்வப்னா சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.
நடிகையர் திலகம்/மஹாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும், ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இது தவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது மற்றும் ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது
அவர்களின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். ’ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை’ என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது.
நடிகையர் திலகம்/மஹாநடி படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துல்கர் சல்மான் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே தயாரிப்பாளர்களுடன் இன்னொரு படத்திலும் இணைகிறார். அவரது சமீபத்திய திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.
துல்கர் சல்மானின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாக தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.
வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...