பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை வனிதா வியகுமார், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவருக்கு ஆதரவாக நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் குரல் கொடுத்ததோடு, ஊடகங்களில் வனிதாவை விமர்சித்து வந்தனர்.
இதற்கிடையே, தன்னையும், தனது மூன்றாவது திருமணம் குறித்தும் விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த வனிதா, ஒரு பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை நேரடியாகவே வெளுத்து வாங்கினார். இதனால், லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், வனிதாவுக்கு புதிய தலைவலி கொடுக்கும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. அதாவது வனிதா தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பி வளாகத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி தனது யுடியுப் சேனலுக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்க செய்லாளர், காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் வனிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது, 5 பேருக்கு மேல் ஒன்று சேரக்கூடாது என்ற கட்டுப்பாட்டு இருக்கும் போது, வனிதா 5 பேருக்கும் அதிகமானவர்களை சேர்த்துக் கொண்டு படப்பிடிப்பில் நடத்தியதால், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.


பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...