’ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநரான அட்லி, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அட்லியின் ஐந்தாவது படம் யாருடன் இருக்கும், என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையே, அட்லி தனது அடுத்தப் படத்தின் மூலம் மீண்டும் விஜயுடன் இணையப் போவதாக ஒரு தகவல் வெளியாக, திடீரென்று ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், இவை இரண்டும் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியாத வகையில், அட்லி தெலுங்கு ஹீரோவை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக்வும் ஒரு தகவல் உலா வந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அட்லி ஜெயம் ரவியுடன் கை கோர்த்துள்ளார். ஆனால், இயக்குநராக அல்ல தயாரிப்பாளராக. ஆம், அட்லி தயாரிக்கும் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சூர்யா என்பவர் தான் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் முதலில் நிவின் பாலி நடிப்பதாக இருந்தது. ஆனால், நிவின் பாலி கால்ஷிட்டில் சொதப்பியதால் இப்படம் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், இக்கதையை கேட்ட ஜெயம் ரவி, கதை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும், இதில் தான் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெயம் ரவியை வைத்தே படத்தை தொடங்க அட்லியும், இயக்குநர் சூரியாவும் முடிவு செய்தார்களாம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...