தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வரும் பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் ஒன்றை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூர்ணாவை பெண் கேட்டு அனுகிய அந்த கும்பல் திடீரென்று அவரிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, அவருக்கு மிரட்ட விடுத்ததால் இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பூர்ணா விவகாரத்தில் பல அதிர்ச்சிக்கரமான தகவல் வெளியாகி, திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகைகளிடம் இந்த விவகாரம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
பூர்ணாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதை அறிந்த ஒரு குடும்பம் துபாயில் தொழில் செய்யும் தனது மகனுக்கு பூர்ணாவை பெண் கேட்டுள்ளனர். இரு குடும்பத்தாரும் பேசி திருமணமும் பேசி முடிக்கப்பட்டதாம்.
மேலும், நடிகை பூர்ணாவும் தான் திருமணம் செய்ய உள்ள நபருடன், தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து அவ்வபோது பேசியதோடு, அவருடன் பழகியதாகவும் சொல்லப்படுகிறது. கிட்டதட்ட, துபாய் தொழிலதிபர் தான் தனது கணவர், என்று முடிவு செய்த பூர்ணா, அவரை முழுவதுமாக நம்பியிருக்கிறார்.
இந்த நிலையில், தான் துபாய் தொழிலதிபர் என்று சொல்லிக் கொண்டவரும், அவரது பெற்றோர்களும் போலி என்பது பூர்ணாவுக்கு தெரிய வந்துள்ளது. தொழிலதிபர் என்று நினைத்து பூர்ணா திருமணம் செய்துக்கொள்ள இருந்தவரும், அவரது குடும்பத்தாரும் ஏமாற்றுக் கும்பல் என்பதை அறிந்தவர், தற்போது அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தால் பெரும் பதற்றம் அடைந்திருக்கும் பூர்ணா, இதனல மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது திருமணம் வேண்டாம், என்ற முடிவுக்கு வந்திருப்பவர், இனி நடனத்தில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளாராம்.
பூர்ணாவுக்கு நேர்ந்த இந்த சம்பவத்தால், வெளிநாட்டு மாப்பிள்ளையை தேடும் நடிகைகள் பீதியடைந்திருக்கிறார்களாம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...