கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் தொடர்பான பரபரப்பு முடிவுக்கு வராது போலிருக்கு. அவர் சிலர் மீது புகார் அளிக்க, அவர் மீது பலர் புகார் அளித்து வருகிறார்கள். இதனால், வனிதா கைது செய்யப்பட இருப்பதாக சிலர் கூற, சிலர் வனிதா குறித்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரைப் பற்றி பலரிடம் கருத்து கேட்பது போன்றவைகளை தங்களது பணியாக செய்ய தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, வனிதா தன்னை தரக்குறைவாக பேசியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், சமீபத்தில் பத்திரிகைகளுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால், அதில் எந்த மாதிரியான வக்கீல் நோட்டீஸ் என்பதையும், அதில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வக்கீல் நோட்டீஸ் மூலம் தன்னிடம் ரூ.1.25 கோடி மிரட்டுவதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் தனக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வனிதா, “நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.
இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...