கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படத்தில் டோனி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது தற்கொலைக்கு காரணமாக முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இது குறித்து சுஷாந்தின் குடும்பத்தார் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பாலிவுட் பிரபலங்கள் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருக்கும் நிலையில், இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம், என்று சுஷாந்த் சிங்க்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும், சுஷாந்த் சிங் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரவர்த்தி பணம் எடுத்துள்ளார் என்றும், சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து ரூ.15 கோடியை வேறு ஒரு கணக்குக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ரியாவும், இன்னும் சிலரும் சேர்ந்து தான் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கும் பாட்னா காவல்துறை, நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்த மும்பை தனிப்படையை அனுப்பியுள்ளது. இதனால், நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, நடிகை ரியா முன் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...