தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கு தற்போது தழில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றாலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் தமன்னா, ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு விளம்பரப் படங்களில் நடித்ததற்காக நடிகை தமன்னா மற்றும் அவருடன் இணைந்து நடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இருவரையும் கைது செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விளையாடும் விளம்பரங்களில் பெரிய அளவில் சூது நடப்பதாகவும், இதனால் இளைஞர்கள் பலர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளத். எனவே, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும், என்று பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றின் போது, ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி விளையாட்டுக்கு நீதிபதி எதிர்ப்பு தெரிவித்தார்.
தற்போது ஆன்லைன் விளையட்டு விவாகரம் தொடர்பாக தமன்னா மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதோடு, அவரை கைது செய்ய வலியுறுத்தியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...