தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களும் தற்போது சினிமாத்துறையில் நடிகர்களாக அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில், செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியல் நடிகையாக தற்போது சினிமாவில் பிஸியான ஹீரோயினாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவருக்கு அடுத்தப்படியாக மற்றொரு செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தும் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘டேனி’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
பிரியா பவான் சங்கர், அனிதா சம்பம் ஆகியோரை தொடர்ந்து திவ்யா துரைசாமியும் தற்போது சினிமாவில் எண்ட்ரியாகியுள்ளார். முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த திவ்யா துரைசாமி, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் மா.க.ப.ஆனந்துக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க அவர் முயற்சித்து வந்தார்.
இதற்காக, விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த திவ்யா துரைசாமி, பல நிறுவனங்களுக்கு நேரடியாக சென்றும் வாய்ப்பு கேட்டு வந்த நிலையில், அவருக்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆம், சுசீந்திரன் இயக்கும் படத்தில் திவ்யா துரைசாமி கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாரதிராஜா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

கொரோனா ஊரடங்கின் போது சென்னையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் சுசீந்திரன் அமைத்திருக்கிறாராம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...