தமிழ் சினிமாவில் திகில் மற்றும் திரில்லர் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுடன் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு படமாக உருவாகியுள்ளது ‘டேனி’.
வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தில், அவருக்கு இணையான வேடத்தில் காவல் துறை அதிகாரியாக ‘களவாணி 2’ மூலம் வில்லனாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார். இவர்களுடன் அனிதா சம்பத், வேல ராமமூர்த்தி, கவின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பொதுவாக சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படங்கள் அனைத்தும் நகரத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். ஆனால், ‘டேனி’ திரைப்படம் கிராமத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் திரில்லராகும். இதனால் தான் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிராமம் ஒன்றில் இளம் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட அந்த கொலையின் பின்னணியை கண்டுபிடிப்பது தான் கதை.
இதை விறுவிறுப்பான காட்சிகளோடும், சுவாரஸ்யமான திரைக்கதை மூலமாகவும், எதிர்ப்பாராத திருப்பங்களோடும் சொல்லியிருக்கும் இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி, நாய் ஒன்றை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் தலைப்பே அந்த நாயின் பெயர் தான். இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எப்படி கதாப்பாத்திரங்களுடன் கச்சிதமாக பொருந்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்களோ, அதேபோல் டேனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த நாயின் செயல்பாடுகள் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும், என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘களவாணி 2’ படத்தில் தஞ்சை அரசியல்வாதியாக, இயல்பாக நடித்து அசத்திய பப்ளிக் ஸ்டார் துரை சுதாகார், இப்படத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியாக நடித்து படக்குழுவினரிடம் பாராட்டு பெற்றவர், படத்தின் ரிலீஸுக்குப் பிறகு ரசிகர்களிடமும் பாராட்டு பெறுவார்.
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தனது பி.ஜி மீடியா ஒர்க்ஸ் மூலம் தயாரித்திருக்கும் ‘டேனி’ நாளை (ஆகஸ்ட் 1) ZEE5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...