தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சிம்பு, பிரபு தேவா என இரண்டு பேருடன் கொண்ட காதலும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன் - விக்கி ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், இது தொடர்பாக காதல் ஜோடி எந்த ஒரு அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்க, விக்னேஷ் சிவனும் படம் இயக்குவதோடு, தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் அவ்வபோது இந்த ஜோடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதோடு, புத்தாண்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
என்ன தான் உலகத்தை சுற்றி மகிழ்ச்சியாக இருந்தாலும், நயன்தாராவின் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் இருக்கிறதாம். இதனால் தான் அவர் விக்னேஷ் சிவனுடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறாராம். அப்படி பல கோவிலுக்கு சென்றாலும், இன்னும் ஒரு கோவிலுக்கு சென்றால் தான் நயனின் திருமணம் நடைபெறுமாம். ஆனால், தற்போதைய கொரோனா ஊரடங்கினால் அந்த கோவிலுக்கு நயனால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறதாம்.
நயன்தாரா ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். அதற்கு காரணம், ஜோதிடர் ஒருவர், சினிமாவில் அவர் பெரிய நிலைக்கு செல்வார், என்று கூற, அது அப்படியே நடந்ததாம். அதனால், எந்த விஷயமாக இருந்தாலும் அந்த ஜோதிடர் சொல்லும்படி தான் நயன் செய்கிறாராம். இதற்கிடையே, நயன்தாராவுக்கு திருமண தோஷம் இருப்பதாக கூறிய ஜோதிடர், தற்போது திருமணம் நடைபெற்றால் அந்த உறவு நிலைக்காது, என்றும் கூறிவிட்டாராம். மேலும், திருமண தோஷம் நீங்க, பரிகாரம் சிலவற்றை அவர் சொல்லியிருக்கிறார். அதுதான் கோவில் விசிட்.
அவர் சொன்னபடி, அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்துவிட்ட நயன் - விக்கி ஜோடி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டுமாம். இதை செய்துவிடால் நயனினி திருமணத்திற்கு எந்த தடையும் இருக்காதாம்.
தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு முடிந்த உடன் கும்பகோணம் கோவிலுக்கு செல்லும் நயன் - விக்கி ஜோடி, திருமண வேலைகளில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளார்களாம்.
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS...
புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...