மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட ஜெய், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாவது ஹிட் கொடுக்கும் ஹீரோவான ஜெய், தனது குணத்தால் திரையுலகில் தனது பெயரை கெடுத்துக்கொண்டதால், அவருக்கான பட வாய்ப்புகளும் குறைந்துக்கொண்டே போகிறது.
இதற்கிடையே நடிகை அஞ்சலியை காதலித்த ஜெய், அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரம் காட்டி வர, அஞ்சலியோ நடிப்பதில் தான் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் அஞ்சலிக்கும், ஜெய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, தற்போது அவர்கள் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாம்.
காதல் தோல்வியால் நொந்து போயுள்ள ஜெய், எப்போதும் மது போதையிலே இருக்கிறாராம். அப்படித்தான் புதன்கிழமை இரவு தனது நண்பரான நடிகர் பிரேம்ஜியுடன் சேர்ந்து மூக்கு முட்ட மது குடித்தவர், நேற்று அதிகாலை இரண்டு மணிக்கு தியாகராயா நகரில் இருந்து, அடையாறு இந்திரா நகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்ற போது அடையாறு பகுதியில் போலீஸ் பாரிகாட் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்.
போதையில் இருந்த ஜெய்யை கைது செய்த போலீசார், சில மணி நேரத்திற்கு பிறகு அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இருந்தாலும், இதுபோல போதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் ஜெய் சிக்குவது இரண்டாவது முறை என்பதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் போது, அடையாறு போக்குவரத்து காவல் துறை, பரிந்துரை செய்துள்ளதாம். இதனால், ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் விரைவில் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...