மீண்டும் வனிதாவை சீண்டும் நாஞ்சில் விஜயன்
Friday August-07 2020

வனிதா வியகுமாரின் மூன்றாவது திருமணம் தொடர்பாக எழுந்த பரபரப்பு தற்போது தணிந்துள்ளது. இப்பிரச்சினையை பயன்படுத்தி தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள நினைத்த சூரியா தேவி, என்ற பெண், தற்போது வனிதா குறித்து வீடியோ போடுவதை நிறுத்திவிட்டு, தனது சொந்த விஷ்யங்கள் குறித்து வீடியோ போட தொடங்கியுள்ளார். ஆனால், அவருக்கு மக்களிடம் கிடைத்திருக்கும் ரீச்சுக்கு வனிதாவே முழு காரணம்.

 

இதை நன்றாக புரிந்துக் கொண்ட மற்றொரு ஜீவன் நாஞ்சில் விஜயன். விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நாஞ்சில் விஜயன், ஊரடங்கினால் டிவி படப்பிடிப்புகள் இல்லாததால் வருமானம் இன்றி தவிக்க, இந்த நேரத்தில் தான் யுடியுப் சேனல் ஒன்றை தொடங்கினார். ஆனால், அது அவருக்கு கைகொடுக்காத நிலையில், சூரியா தேவியின் வீடியோவை போட அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. சூரியா தேவி தங்க முட்டை இடும் வாத்து போல அவருக்கு தெரிய, தொடர்ந்து சூரியா தேவி குறித்து வீடியோ போட்டவர், அப்படியே சூரியா தேவியின் பாணியில் வனிதாவுக்கு எதிராகவும் வீடியோ போட தொடங்கினார்.

 

இதனால் சூரியா தேவியின் 2.0 - ஆக மனுஷனின் பெயர் சோசியல் மீடியாவில் அடிபட, தற்போது சூரியா தேவியுடன் அவருக்கு இருந்த கள்ள உறவு குறித்த ரகசியங்களும் வெளியாகியிருக்கிறது. வனிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அடிபணிந்த நாஞ்சில் விஜயன், வனிதாவிடம் போன் மூலம் சமீபத்தில் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது. மேலும், வனிதா குறித்து பேசுவதை நிறுத்தவும் செய்துவிட்டார்.

 

இந்த நிலையில், திடீரென்று, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “என்னது மன்னிப்பு கேட்டேனா” என்று பதிவிட்டிருப்பவர், தன் முகத்தை குழந்தை முகமாக மாற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நக்கல் செய்துள்ளார்” இதை வைத்து பார்த்தால் அவர் மீண்டும் வனிதாவை சீண்டப் போகிறார், என்று தெரிகிறது.

 

பார்ப்போம், இந்த முறை எப்படிப்பட்ட ரகசியங்கள் லீக்காகிறது என்று,

 

Related News

6869

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery