சினிமா பிரபலங்களை இழிவாக பேசி அதன் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் புதிய யுக்தியை சில கையாள தொடங்கியுள்ளார்கள். சமீபத்தில் கூட நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை வைத்து, சில ஊர் பெயர் தெரியாதவர்கள் தங்களை சமூக வலைதளம் மூலம் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள்.
இந்த பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்பட்ட வனிதா காவல் துறையில் புகார் அளித்ததோடு, தன்னை விமர்சித்தவர்களுக்கு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்போது அவருக்கு எதிராக பேசிய அத்தனை பேரும் காணாமல் போய் விட்டார்கள்.
இதற்கிடையே, சில திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் துணை நடிகையான மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மீரா மிதுன் கையாளும் இந்த நடவடிக்கைக்கு சில சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், விஜய் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரை விமர்சிப்பதோடு, அவர் மீது போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், விஜயை இழிவாக பேசும் மீரா மிதுனுக்கு விஜய் வழியில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, இசை தனது திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றி, “உசுப்பேத்துரவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா போதும், நம்ம வாழ்க்கை ஜம்முனு இருக்கும்” என்ற வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் ரசிகர் பதிவிட்ட இந்த வீடியோவை நடிகை வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்விட் செய்து, இதன் மூலம் விஜயை தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...