கொரோனா பாதிப்பால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சினிமாவில் தின்சரி ஊதியம் பெரும் தொழிலாளர்கள் பெரும் கஷ்ட்டத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அவர்களுக்கு சினிமா சங்கங்கள் பல்வேறு வகையில் உதவி செய்வதோடு, பிரபல நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலர் உதவி செய்தனர்.
அந்த வகையில், நடிகர் சரண் செல்வன், கஷ்ட்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். கஷ்ட்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவாசிய உணவுப் பொருட்களை வழங்கி வரும் சரண் செல்வன், சினிமா நடிகர் நடிகைகள் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு சமீபத்தில் உணவுப்பொருட்கள் வழங்கினார்.
இது குறித்து கூறிய சரண் செல்வன், “ஊரடங்கு தொடரும் பட்சத்தில் சினிமா தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது அவசியமாகிறது. அடிப்படை உணவு பொருட்களுக்குக் கூட சிரமப்படும் தொழிலாளர்கள் பலர் இருந்தாலும் எவரிடமும் சென்று உதவி கேட்பதில் தயக்கம் இருக்கும். அப்படி தயக்கத்திலிருப்பவர்களுக்கு நானாக சென்று உதவி வருகிறேன். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம்.” என்றார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...