இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், சினிமா நடிகர், நடிகைகள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. மேலும், பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான வி.சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென்று உடல் நிலை பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாமிநாதனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று இப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட, இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சார்பில், கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து, ’அரண்மனை காவலன்’, ‘மிஸ்டர்.மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘பகவதி’, ‘அன்பே சிவம்’, ‘சிலம்பாட்டம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை சுவாமிநாதன் தயாரித்திருக்கிறார்.
சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் சுவாமிநாதன், கார்த்திக் ஹீரோவாக நடித்த ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்து “எத்தன வருஷமா கூவு ஊத்துர” என்ற வசனம் மூலம் மக்களிடம் பிரபலமானார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...