பிக் பாஸ் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கும் நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வனிதாவின் திருமணத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பிரபலங்கள் இதை வைத்து தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள நினைக்க, அதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட ரீதியிலான நடவடிக்கையும் மேற்கொண்டார்.
இப்படி பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா தனது மூன்றாவது திருமணம் மூலமாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரபலமாகி வர, அவருடன் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்ற பெயரும் பல்வேறு தளங்களில் அடிபட்டது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என முக்கியமானவர்களுக்கு வழக்கறிஞராக பணியாற்றும் ஸ்ரீதர்.எம், சென்னையின் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார்.
பிரபல வழக்கறிஞர் மட்டும் இன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராகவும் ஸ்ரீதர்.எம் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் காணும் வழங்கறிஞர் ஸ்ரீதர்,எம்-க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் அன்பு சகோதரர் திரு.ஸ்ரீதர்.எம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மகிழ்வில் பங்கேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...