விஷால் மற்றும் கார்த்திக்கை வைத்து பிரபு தேவா இயக்க இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிட்டதற்கு பிறகு, அப்படத்தின் கதையில் பிரபு தேவாவே நடிக்க இருந்த நிலையில், அவரும் அப்படத்தை ஓரம் வைத்துவிட்டு, விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
விஜய் - பிரபு தேவாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் தலைப்பு வைக்கப்படாத அப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, மணிரத்னத்தின் படம் என்று உயர்ந்துக்கொண்டே போகிறவர், வெற்றி கூட்டணியான விஜய் - பிரபு தேவா கூட்டணியோடு இணைந்திருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தேவி’ படத்தின் மூலம் ஊடகங்கள் பாராட்டுக்களை பெற்றதோடு, தயாரிப்பாளருக்கு நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்த பிரபு தேவா - விஜய் கூட்டணியில் உருவாக உள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.
பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...